ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு
x

திருப்பரங்குன்றம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருடப்பட்டது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருச்சி மாவட்டம் உறையூர் கீழமூலவீதியை சேர்ந்தவர் மோதிலால். இவரது மனைவி லட்சுமி (வயது 59).இவர் சம்பவத்தன்று திருச்சியில் இருந்து மதுரைக்கு வந்தார். பின்னர் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் கைத்தறி நகருக்கு புறப்பட்டு சென்றார்.அப்போது பஸ்சில் கூட்ட நெரிசல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லட்சுமி கைப்பையில் வைத்து இருந்த 21 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் லட்சுமி துணிபையை திறந்து பார்த்துள்ளார்.அப்போது பையில் இருந்த நகையை காணவில்லை அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story