அரசு பள்ளிகளை சேர்ந்த 211 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்


அரசு பள்ளிகளை சேர்ந்த 211 பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 211 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘நீட்' தேர்வு எழுதுகிறார்கள்.

பெரம்பலூர்

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்' தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெறுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 114 மாணவ-மாணவிகளும், அரசு மாதிரி பள்ளிகளை சேர்ந்த 97 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 211 பேர் 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர். மாணவ-மாணவிகள் கோரிக்கை வைத்தும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த கல்வி ஆண்டிலும் 'நீட்' தேர்வு எழுதுவதற்கு மையங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அருகே உள்ள மாவட்டங்களுக்கு சென்று 'நீட்' தேர்வு எழுதவுள்ளனர்.


Next Story