பூண்டியில் பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி நலத்திட்ட உதவிகள்


பூண்டியில் பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி நலத்திட்ட உதவிகள்
x

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூண்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர்

இதற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய குழு தலைவர் வெங்கடரமணா, துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை முன்னிட்டு கலெக்டர் பல்வேறு துறைகளின் சார்பாக 718 பயனாளிகளுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story