திருச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் ஒரேநாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் வழக்கத்தைவிட நிரம்பி வழிகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் சற்று அதிகரிக்க தொடங்கி வருகிறது. திருச்சியில் சராசரியாக தினமும் 10 பேருக்கும் கீழ் இருந்த கொரோனா தொற்று, நேற்று ஒரேநாளில் 22 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்புடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 75 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story