மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 22 பேர் கைது


மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 22 பேர் கைது
x

மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

22 பேர் கைது

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்து போலீஸ் உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த தனிப்படை போலீசார் நேற்று ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

எச்சரிக்கை

கைதானவர்களிடம் இருந்து 7 ஆயிரத்து 670 லாட்டரி சீட்டுகளும், ரூ.23 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மதுரை மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோதமாக தமிழக அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்துள்ளார்.


Related Tags :
Next Story