கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது
கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது
தஞ்சாவூர்
பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பாக்கி தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பாக கடந்த 11 நாட்களாக கரும்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எம்.செல்வம், பட்டுக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கந்தசாமி உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story