கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்த 22 மாணவ-மாணவிகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தேர்வாகி உள்ளது தொியவந்துள்ளது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

22 மாணவ-மாணவிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் 22 பேர் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு சோ்க்கைக்கு தேர்வாகி உள்ளனர். இதில் 10 பேர் அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் தனியார் மருத்துவ கல்லூரியிலும், 2 பேர்(பி.டி.எஸ்) பல் மருத்துவ படிப்புக்கு அரசு மருத்துவ கல்லூரியிலும், 4 பேர் தனியார் மருத்துவ கல்லூரியிலும் சேர்க்கைக்கு தேர்வாகி உள்ளனர்.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தேர்வாகி உள்ள மாணவ-மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

அரசு மாதிரி பள்ளி

சின்னசேலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்கள் அஸ்வின்ராஜ், விக்னேஷ், நவீனாதேவி, அகிலா ஆகிய 4 பேர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவிகள் விஜயலட்சுமி, யோகேஸ்வரி ஆகியோர் தனியார் மருத்துவ கல்லூரியிலும், நயினார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாலாஜி, அருண்குமார் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், கருப்பையா தனியார் மருத்துவ கல்லூரியிலும் சேர்க்கைக்கு தேர்வாகி உள்ளனர்.

அதேபோல் பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் கிஷோர் அரசு மருத்துவ கல்லூரியிலும், மாணவி அகிலா தனியார் மருத்துவக் கல்லூரியிலும், ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் ராகுல் அரசு மருத்துவ கல்லூரியிலும், மாணவர் ரமேஷ் தனியார் மருத்துவ கல்லூரியிலும், பாதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி முத்துலட்சுமி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவர் அம்ரீன் அரசு மருத்துவக்கல்லூரியிலும், சித்தால் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி உமாமகேஸ்வரி தனியார் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கைக்கு தேர்வாகி உள்ளனர்.

பல் மருத்துவம்

அதேபோல் சின்னசேலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி மாணவர் முகமது ஷெரிப், மாணவி சோபிகா ஆகிய 2 பேர் அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், மாணவிகள் மோகனாம்பாள், ரம்யா, மாணவர் சுபாஷ் மற்றும் விளந்தை அரசு மேல்நிலை பள்ளி மாணவி கலைச்செல்வி ஆகியோர் தனியார் பல் மருத்துவக் கல்லூரியிலும் சேர்க்கைக்கு தேர்வாகி உள்ளனர்.


Next Story