22 பெண்களிடம் பணம் மோசடி


22 பெண்களிடம் பணம் மோசடி
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே 22 பெண்களிடம் பணம் மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர்.

கடலூர்

கடலூர்

விருத்தாசலம் அருகே டி.புத்தூரை சேர்ந்த 22 பெண்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த 4 பேர் எங்களிடம் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.300 வீதம் 5 ஆண்டுகள் 10 மாதம் செலுத்தினால் 70 மாதம் கழித்து, 71-வது மாதம் மொத்தமாக போனஸ் தொகையுடன் சேர்த்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினர். இதை நம்பிய நாங்கள் 22 பேர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பணத்தை செலுத்தினோம்.

பல லட்சம் ரூபாய் மோசடி

அதன்பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக பணத்தை எங்களால் செலுத்த முடியவில்லை. இதனால் ஏற்கனவே நாங்கள் செலுத்திய தலா ரூ.18,500 பணத்தை அவர்களிடம் திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை தரவில்லை. இதேபோல் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை தராமல் மோசடி செய்து விட்டனர். ஆகவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story