228 கிலோ கஞ்சா சிக்கியது


228 கிலோ கஞ்சா சிக்கியது
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

228 கிலோ கஞ்சா சிக்கியது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடல் பகுதி வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, பீடி பண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்துவது தொடர்கின்றது. இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் கடல் பகுதியில் படகு ஒன்றில் ஏற்றி கொண்டுவரப்பட்ட 90 பார்சல்களில் இருந்த 228 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இலங்கையை சேர்ந்த ஒரு நபரையும் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்கள் தமிழக கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ராமேசுவரம், ராமநாதபுரம் உளவு பிரிவு போலீசாரும் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த கஞ்சா பார்சல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story