குஜராத் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,296 டன் யூரியா உரம் ஈரோட்டுக்கு வந்தது


குஜராத் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2,296 டன் யூரியா உரம் ஈரோட்டுக்கு வந்தது
x

குஜராத் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரத்து 296 டன் யூரியா உரம் ஈரோட்டுக்கு வந்தது.

ஈரோடு

ஈரோடு:

குஜராத் மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் 2 ஆயிரத்து 296 டன் யூரியா உரம் ஈரோட்டுக்கு வந்தது.

2,296 டன் யூரியா

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் நெல் நடவுப்பணிகள் நடக்கிறது. மேலும் மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், வாழை, மரவள்ளி போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து கிரிப்கோ நிறுவன யூரியா உரம் 2 ஆயிரத்து 296 டன் ரெயில் மூலம் ஈரோடு வந்தடைந்தது.

ஈரோடு ரெயில் நிலையத்தில், வேளாண் இணை இயக்குனர் எஸ்.சின்னசாமி, வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஜெயசந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து வேளாண் இணை இயக்குனர் எஸ்.சின்னசாமி கூறியதாவது:-

மாவட்ட அளவில் தேவையான இடங்களுக்கு, இந்த உரம் பிரித்து அனுப்பப்படும். உரங்களுடன் சேர்த்து, பிற பொருட்களை கட்டாயப்படுத்தி, விவசாயிகளுக்கு வழங்கக்கூடாது. மீறும் உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மண் பரிசோதனை

குறைபாடுகள் இருந்தால் வட்டார வேளாண் உதவி இயக்குனரிடம் தெரிவித்து தீர்வு பெறலாம். தற்போது, ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 859 டன் யூரியா உரமும், 1,845 டன் டி.ஏ.பி. உரமும், 2 ஆயிரத்து 184 டன் பொட்டாஷ் உரமும், 29 ஆயிரத்து 529 டன் காம்ப்ளக்ஸ் உரமும், 945 டன் சூப்பர் பாஸ்பேட் உரமும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது.

வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் திரவ உயிர் உரங்களை பெற்று பயன்படுத்துவதுடன், ஈரோடு திண்டலில் உள்ள வேளாண் துறையின் மண் பரிசோதனை நிலையத்தில் மண் பரிசோதனை செய்து, பரிந்துரைக்கப்படும் உரங்களை மட்டும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உரச்செலவு குறையும். மண் வளம் காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story