சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது
சேலம்
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 23 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 7 பேருக்கும், ஓமலூர், வீரபாண்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், சங்ககிரி, கெங்கவல்லியில் தலா 2 பேர் உள்பட மொத்தம் 23 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story