பூட்டிய வீட்டில் 23 பவுன் நகை திருட்டு


பூட்டிய வீட்டில் 23 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவாரம்பாளையத்தில் பூட்டிய வீட்டில் 23 பவுன் நகை திருட்டு போனது.

கோயம்புத்தூர்

ஆவாரம்பாளையம்

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பாரதி காலனியை சேர்ந்தவர் குமரவடிவேல் (வயது 55). இவருடைய மனைவி பரமேஸ்வரி (50). இவர்கள் 2 பேரும் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். இதனால் அவர்களது வீட்டை உறவினர் ஒருவர் மேற்பார்வை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கோவை வந்த பரமேஸ்வரி தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க வளையல்கள், நெக்லஸ், கை செயின்கள் உள்பட 23 பவுன் நகைகளை வைத்து விட்டு வெளி நாட்டிற்கு சென்றார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவை வந்து தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு நகைகள் இல்லை. அதை யாரோ திருடியது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story