2,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது


2,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

2,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே காமராஜர்புரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜித் மேரி தலைமையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தேவேந்திரன் உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் 70 மூடைகளில் தலா 40 கிலோ எடையுள்ள 2 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டு பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் லாரி டிரைவர் சிவகங்கை மாவட்டம் கொன்னைபட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 60), பொன்னமராவதி அஜய்குமார் (22) இருவரையும் கைது செய்தனர். இந்த அரிசியை பல்வேறு பகுதிகளில் சேகரித்து கடத்தி சென்ற கடலாடி தாலுகா ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி ராமநாதபுரம் நுகர் பொருள் வாணிபக்கடங்கில் ஒப்படைக்கப்பட்டது.


Related Tags :
Next Story