நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் 235 மனுக்களுக்கு தீர்வு


நாமக்கல் மாவட்டம் முழுவதும்  பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் 235 மனுக்களுக்கு தீர்வு
x

நாமக்கல் மாவட்டம் முழுவதும் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் 235 மனுக்களுக்கு தீர்வு

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ளவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று 8 இடங்களில் நடத்தப்பட்டது.

நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல்லில் நடந்த பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். மாவட்டம் முழுவதும் நடந்த இந்த குறைதீர்க்கும் முகாமில் 242 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 7 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

1 More update

Next Story