நேரடி கொள்முதல் நிலையத்தில் 24 நெல் மூட்டைகள் மாயம்


நேரடி கொள்முதல் நிலையத்தில் 24 நெல் மூட்டைகள் மாயம்
x
தினத்தந்தி 29 April 2023 12:15 AM IST (Updated: 29 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் போலீஸ் நிலையம் எதிரே நேரடி கொள்முதல் நிலையத்தில் 24 நெல் மூட்டைகள் மாயம் மர்ம நபர்கள் கைவரிசை

கடலூர்

பெண்ணாடம்

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 48). விவசாயியான இவர் தனது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை மூட்டையாக கட்டி பெண்ணாடம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனைக்காக வைத்துள்ளார். மொத்தம் 24 நெல் மூட்டைகளை ராமகிருஷ்ணன் வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் தினமும் நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று தனது நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் பாதுகாத்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் ராமகிருஷ்ணன் நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று பார்த்தபோது. அவருக்கு சொந்தமான 24 நெல் மூட்டைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்மூட்டைகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையம் எதிரே உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் திருடு போய் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story