குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து


குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து
x
தினத்தந்தி 28 Sep 2023 7:15 PM GMT (Updated: 28 Sep 2023 7:15 PM GMT)

கோவை உள்பட 4 மாவட்டங்களில் குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறினார்.

கோயம்புத்தூர்
கோவை


கோவை உள்பட 4 மாவட்டங்களில் குற்றச்செயல்களை தடுக்க 24 மணி நேர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறினார்.


ரோந்து பணி


கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் குற்றச்செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் வாகனங்களில் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன.


கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ளது. அதில் ஏராளமான வனப்பகுதிகள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நக்சலைட், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும் தமிழக அதிரடிப் படையினர் வனத்துறையினருடன் இணைந்து கேரள, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


கஞ்சா கடத்தல் தடுப்பு


மேலும் போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட ஆதிவாசி கிராமங்களுக்கு உள்ளூர் போலீசார் சென்று மவோயிஸ்டுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆதிவாசிகளுக்கு ஜாதி சான்றிதழ் உள்பட சில சான்றிதழ்களை வருவாய் துறை யினரிடம் இருந்து பெற்று தர போலீசார் மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுதவிர வனத்துறையினருடன் இணைந்து ஆதிவாசி மக்கள் குடியிருப்பிற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


வட மாநிலங்களை சேர்ந்த சில நபர்கள் கோவை சரக பகுதிக ளுக்கு கஞ்சா கடத்தி வருவதாக புகார்கள் வந்து உள்ளது.

அவர்களுக்கு கஞ்சா வினியோகிப்பது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களை கைது செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story