திருப்பத்தூர் மாவட்டத்தில் 24,308 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 24,308 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24,308 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 24,308 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் பார்வையிட்டார்.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில், திருப்பத்தூர் தாலுகாவில் 56 மையங்களில் 16,403 பேரும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 14 மையங்களில் 3,335 பேரும், வாணியம்பாடி தாலுகாவில் 18 தேர்வு மையங்களில் 5,735 பேரும், ஆம்பூர் தாலுகாவில் 10 தேர்வு மைங்களில் 3,196 பேர் என மொத்தம் 28,669 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்திற்கு காலை 8 மணி முதலேயே தேர்வு எழுத ஆர்வமுடன் தேர்வர்கள் வந்தனர். அவர்கள் சோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் 5 பறக்கும் படையும், 28 நடமாடும் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

24,308 பேர் எழுதினர்

திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, தூயநெஞ்ச கல்லூரி, நாட்டறம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி இந்து மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 4 தாலுகாவில் சேர்த்து மொத்தம் 24,308 பேர் குரூப்-4 தேர்வை எழுதினர். 4,361 பேர் தேர்வு எழுதவில்லை.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 18 மையங்களில் குரப்-4 தேர்வு நடைபெற்றது. இதில் 5,760 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தனர். வாணியம்பாடியில் தேர்வு நடைபெற்ற மையங்களை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாணியம்பாடி தாசில்தார் சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story