வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,782 பேர் விண்ணப்பம்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,782 பேர் விண்ணப்பம்
x

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 24,782 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சேலம்

24,782 பேர் பெயர் சேர்க்க...

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 254 வாக்குச்சாவடிகளில் கடந்த 2 நாட்களாக வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவைக்காக கெங்கவல்லி தொகுதியில்-1,945 பேரும், ஆத்தூர் தொகுதியில்-2,255 பேரும்,

ஏற்காடு தொகுதியில்-1,744 பேரும், ஓமலூர் தொகுதியில்-2,133 பேரும், மேட்டூர் தொகுதியில்-2,011 பேரும், எடப்பாடி தொகுதியில் 3,161 பேரும், சங்ககிரி தொகுதியில் 2,536 பேரும், சேலம் மேற்கு தொகுதியில்- 2,612 பேரும், சேலம் வடக்கு தொகுதியில்- 2,226 பேரும், சேலம் தெற்கு தொகுதியில் 2,215 பேரும், வீரபாண்டி தொகுதியில் 1,944 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 782 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க புதிதாக விண்ணப்பம் அளித்துள்ளனர்.

19, 20-ந் தேதி

அதேபோல், 11 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு 7,649 பேரும், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கு 8,286 பேரும் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதாவது, பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த முதலாவது சிறப்பு முகாமில் 15,157 விண்ணப்பங்களும்,

நேற்று நடந்த 2-வது சிறப்பு முகாமில் 25,560 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வருகிற 19, 20-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story