பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25-ந்தேதி நீச்சல் பயிற்சி வகுப்புகள்


பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25-ந்தேதி நீச்சல் பயிற்சி வகுப்புகள்
x

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அடிப்படை நீச்சல் கற்று கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் 25-ந்தேதி தொடங்குகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் அடிப்படை நீச்சல் கற்று கொடுக்கும் பயிற்சி வகுப்புகள் 3 கட்டமாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி வரையிலும் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், காலை 8 மணி முதல் 9 வரையிலும், மாலை 4 மணி முதல் 5 வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் பிரதி திங்கட்கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்று தரப்படும். எனவே கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன் பெறவும், நீச்சல் பயிற்சி முழுமையாக கற்று கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் ஆதார் அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story