விவசாயி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை


விவசாயி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
x

வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாமக்கல்

பரமத்தி வேலூர்

25 பவுன் நகை கொள்ளை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 42) விவசாயி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஷ் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசார் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொரு சம்பவம்

புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. நேற்று காலை 11 மணியளவில் கதிர்வேலின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் ஒருவர் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 14 பவுன் மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடியதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் கதிர்வேலின் வீட்டில் சத்தம் கேட்டதை தொடர்ந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு விட்டு மர்மநபர் ஓடியுள்ளார். மேலும் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்த மற்றொரு மர்மநபருடன் சேர்ந்து தப்பி சென்றுள்ளார்.

முன்னதாக அதே பகுதியில் பாப்பாத்தி என்ற பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story