சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.25½ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்


சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.25½ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
x

சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ரூ.25½ லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.

கரூர்

ஏலம்

கரூர் மாவட்டம், சாலைப்புதூரில் அரசு ஒழுங்கு முறை வேளாண் விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம் மற்றும் க.பரமத்தி ஒன்றிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 45.45 குவிண்டால் எடை கொண்ட தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.65-க்கும், குறைந்த விலையாக ரூ.21.59-க்கும், சராசரி விலையாக ரூ.24.39-க்கும் என ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 110-க்கு விற்பனை ஆனது.

ரூ.25½ லட்சத்துக்கு விற்பனை

அதேபோல் 280.14 குவிண்டால் எடை கொண்ட 581 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.86.59-க்கும், குறைந்த விலையாக ரூ.82.29-க்கும், சராசரி விலையாக ரூ.84.59-க்கும், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.89-க்கும், குறைந்த விலையாக ரூ.70.89-க்கும், சராசரி விலையாக ரூ.78.65-க்கும் என ரூ.22 லட்சத்து 58 ஆயிரத்து 76-க்கு விற்பனை ஆனது. 19.39 குவிண்டால் எடை கொண்ட 26 மூட்டை சிவப்பு எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.106.99-க்கும், குறைந்த விலையாக ரூ.87.99-க்கும், சராசரி விலையாக ரூ.104.99-க்கும் என ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 363-க்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக இந்த வாரம் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், ஆகியவை ரூ.25 லட்சத்து 60 ஆயிரத்து 549-க்கு விற்பனை ஆனது.


Next Story