25 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம்


25 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:45 AM IST (Updated: 24 Jun 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

25 ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

தேனி

பெரியகுளம் பகுதியில் கூட்டுறவுத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் தலைமையில், 9 கூட்டுறவு சார்பதிவாளர்களை கொண்ட பறக்கும் படை குழுவினர் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தனர். மொத்தம் 27 கடைகளில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். குடிமைப்பொருட்களின் இருப்பு, மறு எடை சரிபார்ப்பு, கடைகள் திறக்கும் நேரம், வழங்கப்படும் பொருட்களின் தரம், கடைகளை தூய்மையாக பராமரிக்கும் முறை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பொருட்கள் இருப்பு குறைவு கண்டறியப்பட்ட 25 கடைகளின் விற்பனையாளர்களுக்கு, இருப்பு குறைவு அளவுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் ரூ.13 ஆயிரத்து 425 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இருப்பு குறைவு மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் உத்தரவிட்டார்.


Next Story