அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனசை உடனே வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 25 சதவீத தீபாவளி போனசை உடனே வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனசை வழங்க முன்வர வேண்டும்.
அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அவர்களின் குடும்ப செலவுக்கே போதுமானதாக இல்லை. இருப்பினும் பொருளாதார சிரமத்தைப் தாங்கிக்கொண்டு தங்களுக்கான பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள். அவர்களின் மக்கள் பணி சிறப்புக்குரியது.
அவர்களுக்கு தமிழக அரசு, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கும் போனசை 25 சதவீத அளவில் முன்கூட்டியே வழங்கி தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story