விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்கா பறிமுதல்

சூலூர் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கோயம்புத்தூர்
கருமத்தம்பட்டி,
கோவை சூலூரை அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதுதொடர்பாக சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த பொன்ரமேஷ் (47), கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (37) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிலோ குட்கா, புகையிலை பொருட்களையும், 2 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






