250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் வனஉயிரின காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து வனத்துறை சிறப்பு பாதுகாப்பு படையினர் திருப்பாலைக்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் தெரு பகுதியில் காளியப்பன் என்பவரின் மகன் சஞ்சய்காந்தி (வயது 43) என்பவரின் வீட்டில் கடல்அட்டை இருந்தது தெரிந்தது. சுமார் 250 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை பறிமுதல் பாதுகாப்பு படையினர் இதுதொடர்பாக சஞ்சய்காந்தியை பிடித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் மேற்கண்ட கடல் அட்டைகளுடன் சஞ்சய் காந்தி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தார். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story