250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்


250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
x

ஆலங்குடி அருகே 250 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலங்குடி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மணமல்லி தலைமையிலான போலீசார் ஆலங்குடி அருகே உள்ள அரண்மனை தோப்பு நெடுவாசல் மேற்கு பகுதியை சேர்ந்த மணி (வயது 65) என்பவரது தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 250 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story