கரூரில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 25,196 பேர் பயன் அடைந்துள்ளனர்


கரூரில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 25,196 பேர் பயன் அடைந்துள்ளனர்
x

கரூரில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 25,196 பேர் பயன் அடைந்துள்ளனர்.

கரூர்

108 ஆம்புலன்ஸ்

தமிழகத்தில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அவசர சேவை 108 ஆம்புலன்ஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மண்மங்கலம், கடவூர் உள்ளிட்ட 8 தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் 19 ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு 80 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெண்களின் பிரசவத்திற்காக மட்டுமின்றி விபத்து உள்ளிட்ட மிக முக்கிய அவசர காலக்கட்டத்தில் அழைத்தவுடன் உடனடியாக வந்து சேரும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கரூரில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 25,196 பேர் பயன் பெற்று உள்ளனர்.

பிரசவம்

இதில் பிரசவத்திற்காக மட்டும் 7,400 பேரும், விபத்து தேவைக்காக 2,672 பேரும், இதர மருத்துவ சேவைக்காக 15,124 பேரும் அழைத்து பயன் பெற்று உள்ளனர். மேலும் கடந்த ஆண்டில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் ஆம்புலன்சில் 25 குழந்தைகள் சுக பிரசவத்துடன் பிறந்து உள்ளதுடன், அவசர தேவைக்காக அழைத்தபோது 52 பெண்களுக்கு அவர்களது இல்லத்தில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது என 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


Next Story