ராம்கோ சிமெண்ட்ஸ்- வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 25-வது ஆண்டு விளையாட்டு விழா


ராம்கோ சிமெண்ட்ஸ்- வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 25-வது ஆண்டு விளையாட்டு விழா
x

ராம்கோ சிமெண்ட்ஸ்- வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 25-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்சின் வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 25-வது ஆண்டு விளையாட்டு விழா, தேசிய விளையாட்டு தினமான நேற்று முன்தினம் தலைவர் (உற்பத்தி) ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு திருச்சி கைப்பந்து கழகத்தின் தலைவர் டாக்டர் தங்க பிச்சைய்யா சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்புைரயாற்றினார். ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றி வருகை தந்த அனைவரையும் வரவேற்று நடன நிகழ்ச்சிகளையும், விளையாட்டு போட்டிகளையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூத்த பொது மேலாளர் லட்சுமணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பொது மேலாளர் மற்றும் பள்ளி தாளாளர் ஞானமுருகன் பள்ளிக்கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் டாக்டர் தங்க பிச்சைய்யா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் பள்ளி முதல்வர், ஆசிரியப் பெருமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆலையின் மூத்த அதிகாரிகள், தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story