26 போலீசார் இடமாற்றம்


26 போலீசார் இடமாற்றம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் 26 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நசுருதீன், ஒலக்கூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, திண்டிவனம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் பெரியதச்சூர் போலீஸ் நிலையத்திற்கும், கஞ்சனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமாரசெல்வம் வளத்தி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் உள்பட மொத்தம் 26 போலீசார், மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.


Next Story