2,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது


2,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது
x

2,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சைக்கு வந்தது

தஞ்சாவூர்

மத்திய தொகுப்பில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2,600 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்றுகாலை வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் தேவைக்கு ஏற்ப சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும்.


Related Tags :
Next Story