சிற்றார்-2 அணை பகுதியில் 26.2 மி.மீ. மழை பதிவு
குமரி மாவட்டத்தில் சிற்றார்-2 அணைப்பகுதியில் 26.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் சிற்றார்-2 அணைப்பகுதியில் 26.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழையும், வெயிலுமாக மாறி, மாறி சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது. அதேநேரத்தில் பலத்த சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது. நேற்று முன்தினமும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் சிற்றார்-2 அணை பகுதியில் அதிகபட்சமாக 26.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
மழை அளவு
பேச்சிப்பாறை அணை- 24.2, பெருஞ்சாணி அணை- 11.8, புத்தன் அணை- 9.2, சிற்றார்- 1 அணை- 9.6, மாம்பழத்துறையாறு அணை- 5.6, முக்கடல் அணை- 8, பூதப்பாண்டி- 10.2, கன்னிமார்- 4.4, கொட்டாரம்- 2.6, நாகர்கோவில்- 3.2, சுருளக்கோடு- 13.6, தக்கலை- 2.3, பாலமோர்- 12.4, திற்பரப்பு- 9.8, அடையாமடை- 3, ஆனைக்கிடங்கு- 6.2 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
மலையோர பகுதியில் பெய்துவரும் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 602 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 639 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 39.20 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 202 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 58.35 அடியாக உள்ளது.