நெல்லைக்கு ரெயில் மூலம் 2,630 டன் ரேஷன் அரிசி வருகை
நெல்லைக்கு ரெயில் மூலம் நேற்று 2,630 டன் ரேஷன் அரிசி கொண்டு வரப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் வினியோகத்துக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள், ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் வடமாநிலங்களில் இருந்து கோதுமை மற்றும் உர மூட்டைகளும் நெல்லைக்கு ரெயிலில் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து 21 ரெயில் பெட்டிகளில் 2,630 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.
அந்த ரெயில் பெட்டிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அந்த லாரிகள் ஸ்ரீபுரம் குடோனுக்கு சென்றதும், அங்கு அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. அவை தேவைக்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story