264 மது பாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 264 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு சங்கூரணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மகாலிங்கம் (வயது60) என்பவரிடம் சோதனை நடத்திய போது அவரிடம் 223 மது பாட்டில்களும், ரூ.1,930-ம் இருந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல நகர் போலீஸ்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதியழகன் (24) என்பவர் 41 மதுபாட்டில்களும், ரூ.7,020-ம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story