கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 265 மனுக்கள் பெறப்பட்டன


கலெக்டர் அலுவலகத்தில் நடந்தமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 265 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 265 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 265 பேர் மனுக்களை கொடுத்தனர்.

மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, சமூகநலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story