2,674 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
2,674 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் மற்றும் புதுக்கோட்டை பறக்கும்படை தனி தாசில்தார் வரதராஜன் தலைமையில் அதிகாரிகள் கே.புதுப்பட்டி அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 38 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை, சரக்கு வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 636 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் கைப்பற்றினர். மொத்தம் 2 ஆயிரத்து 674 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தது தொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story