சேலம் மாவட்டத்தில் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் கலெக்டர் கார்மேகம் ஆய்வு


சேலம் மாவட்டத்தில்  268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்  கலெக்டர் கார்மேகம் ஆய்வு
x

சேலம் மாவட்டத்தில் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

சேலம்

சேலம்,

சிறப்பு முகாம்

தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகமாகி வருகிறது. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 240 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 28 இடங்களிலும் என மொத்தம் 268 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புக்குள்ளான பலர் பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உப்பு கரைசல் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநகர் நல அலுவலர் யோகானந்த், பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி ஆகியோர் உடன் இருந்தனர்.

தவிர்க்க வேண்டும்

இந்த முகாம் குறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் தடுப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 268 இடங்களில் நடைபெற்றது.

காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக அருகில் உள்ள காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரிடம் பரிசோதனை செய்து முறையாக சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பின் டாக்டரின் அறிவுரையை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story