போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர். 530 பேர் தேர்வு எழுதவில்லை.

புதுக்கோட்டை

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்காக விண்ணப்பித்த தேர்வர்கள் நேற்று காலையிலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்களிடம் செல்போன், கைக்கெடிகாரம், மின்னணு பொருட்கள், உடமைகளை மைய நுழைவுவாயிலேயே போலீசார் வாங்கி தனியாக அடுக்கி வைத்தனர். தேர்வு காலை மற்றும் மதியம் என 2 வேளைகளில் நடைபெற்றது.

2,692 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வை எழுத 2,186 ஆண்களும், 1,036 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 222 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், ஆண்கள் 1826 பேரும், பெண்கள் 866 பேரும் என மொத்தம் 2 ஆயிரத்து 692 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 360 பேரும், பெண்கள் 170 பேர் என மொத்தம் 530 பேர் இத்தேர்வை எழுதவரவில்லை. தேர்வு மையத்தில் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. மேலும் தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 12.30 மணிக்கும், மதியம் 3.30 மணிக்கு தொடங்கி 5.10 மணிக்கும் நிறைவடைந்தது. தேர்வு நடைபெற்றதை சென்னை வடக்கு டி.ஐ.ஜி. அபிஷேக் தீக்சித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story