ராமநாதபுரத்தில் பா.ஜ.க.வினர் 27 பேர் கைது
ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். இதன்படி ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் தலைமையில் ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story