முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார்


முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி புகார்
x

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்துள்ளார்.

சென்னை

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜி.கே.கந்தசாமி. அ.தி.மு.க. பிரமுகரான இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி பொருளாளராக இருக்கிறேன். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொன்னார். அவர் சொன்னதின் பேரில் எனக்கு தெரிந்த 6 பேரிடம் ரூ.27 லட்சம் வசூலித்து கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ரூ.27 லட்சத்தையும் திருப்பித்தராமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, ரூ.27 லட்சம் பணத்தையும் மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story