காலாவதியான 27 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்


காலாவதியான 27 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல்
x
ராணிப்பேட்டை

திருப்பத்தூர் மற்றும் கந்திலி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று கந்திலி ஒன்றிய பகுதிகளில் மளிகை, ஸ்வீட், குளிர்பான கடைகள், ஓட்டல் உள்ளிட்ட 21 கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் காலவதியான சமையல் எண்ணெய் 27 லிட்டர் பறிமுதல் செய்து அளிக்கப்பட்டு, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாத காரணத்தால் அந்த கடைக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளில் அரசு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியதால் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், 2 சிக்கன் கடைகளில் சிக்கனில் கலர் அதிகமாக சேர்த்தால் சிக்கன் பறிமுதல் செய்யபட்டு, தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் வாழை இலையில் உணவு பரிமாற வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story