27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா


27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா
x

27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

திருச்சி

தா.பேட்டை செல்லாண்டியம்மன் கோவில் வளாகத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். முன்னதாக செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 27 நட்சத்திரங்களுக்கு உரிய நபர்கள் அமர வைத்து சங்கல்பம் நடைபெற்றது. அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், உலக நன்மைக்காகவும் அனைவரும் சேர்ந்து பிரார்த்தனை செய்தனர். அதனைதொடர்ந்து கோவில் வளாகத்தில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. விழாவில் தி.மு.க ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் மயில்வாகனன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், நகர செயலாளர்கள் தக்காளி தங்கராசு, தர்மராஜ், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க நிர்வாகி பிரபாகரன், கிராம முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர்.


Next Story