தமிழகத்தில் மேலும் 2,743 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 743 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். `
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,662 இல் இருந்து 2,743 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,765 லிருந்து 17,717 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 1,060 இல் இருந்து 1,062 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று புதிதாக உயிரிழப்பு பதிவாகவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story