27,500 வீடுகளின் சாக்கடை குழாய் இணைக்கப்படும்
நஞ்சுண்டாபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் 27 ஆயிரத்து 500 வீடுகளின் சாக்கடை குழாய்கள் இணைக்கப்ப டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நஞ்சுண்டாபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் 27 ஆயிரத்து 500 வீடுகளின் சாக்கடை குழாய்கள் இணைக்கப்ப டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கோவை மாநகராட்சியில் பெரும்பாலான பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக உக்க டம் கழிவுநீர் பண்ணை அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டம் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதால் நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நஞ்சுண்டாபுரத்தில் ரூ.43 கோடியே 60 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதற்கு அந்த பகுதி பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.
பயன்பாட்டுக்கு திறப்பு
இதன் காரணமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வந்தது.
தற்போது பணி முடிவடைந்ததால் நஞ்சுண்டாபுரம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது.
இங்கு தினமும் 40 எம்.எல்.டி. (4 கோடி லிட்டர்) கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யலாம்.
தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்து உள்ளதால் குறைந்த அளவே கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
12 எம்.எல்.டி.
கோவை ராமநாதபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் நஞ்சுண்டா புரம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
இங்கு 27 ஆயிரத்து 500 வீடு களின் சாக்கடை கழிவுகள் சென்று சேரும் வகையில் குழாய் மூலம் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது வரை 16 ஆயிரம் வீட்டு சாக்கடை குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது. தினமும் 12 எம்.எல்.டி. கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
விரைவில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு இணைப்பு கொடுத்ததும் 40 எம்.எல்.டி. அளவுக்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.