ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு


ரூ.27,700 கோடி கடன் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் 2022-23-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சமீரன் கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் 2022-23-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் சமீரன் கூறினார்.

கடன் வழங்க இலக்கு

கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கடன் திட்ட புத்தகத்தை கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி வெளியிட்டார்.

முதல் பிரதியை கனரா வங்கி உதவி பொதுமேலாளர் எஸ்.பாபு, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் அமிர்தவள்ளி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.பின்னர் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து வெளியிடுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்திலேயே மிகவும் அதிகபட்சமாக 2022-23-ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 700 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டைவிட அதிகம்

இந்த ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாரமாய் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான கடன் திட்டத்தில் விவசாயத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்துக்கு ரூ.14 ஆயிரத்து 500 கோடி, இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.1,200 கோடி வழங்கப்படுகிறது.

இது கடந்த ஆண்டைவிட ரூ.4 ஆயிரத்து 987 கோடி அதிகம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து முன்னேறிய 4 பெண்களுக்கு கலெக்டர் சமீரன் விருது வழங்கினார்.


Next Story