கடைகளில் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 28 மின்னணு தராசுகள் பறிமுதல்


கடைகளில் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 28 மின்னணு தராசுகள் பறிமுதல்
x

கடைகளில் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 28 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரூர்

கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையன், 2-ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன், மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சந்திரமதி, முத்திரை ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசாருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர்சந்தை, திரு.வி.க.ரோடு, பிரம்ம தீர்த்தம்ரோடு, வெங்கமேடு தண்ணீர் தொட்டி அருகில், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள காய்கறி கடைகள், பூண்டு விற்பனை செய்யும் இடங்கள், மட்டன் ஸ்டால் மற்றும் மீன் கடைகளில் உள்ள எடையளவுகள் முறையாக தொழிலாளர் துறை அலுவலகத்தில் முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது முறையாக முத்திரையிடப்பட்டு பயன்படுத்தப்படாத மின்னணு தராசுகள், கைத்தராசுகள், எடை கற்கள், ஊற்றல் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மின்னணு தராசுகள் 28, இரும்பு எடை கற்கள் 25, இதர எடையளவுகள் 5 என மொத்தம் 58 இனங்கள் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story