கொட்டகையில் அடைத்த 28 ஆடுகள் சாவு


கொட்டகையில் அடைத்த 28 ஆடுகள் சாவு
x

முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.

விருதுநகர்

ஆலங்குளம்,

முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.

பீடியை வீசினார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர், சேதுராஜா. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது ஆடுகளை, கொட்டகையில் அடைத்து வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் சில ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டார். மற்ற ஆடுகள் கொட்டகையில் இருந்தன.

இந்தநிலையில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 70) என்பவர், பீடியை புகைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள சோளக்காட்டில் வீசிச் சென்றுள்ளார்.

28 ஆடுகள் சாவு

அப்போது திடீரென சோள வயல் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீயானது வேகமாக அருகே உள்ள ஆட்டு கொட்டகைக்கும் பரவியது. இதில் 28 ஆடுகள் உயிரோடு கருகி பரிதாபமாக இறந்தன

ேமலும் 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன. இதுகுறித்து சேதுராஜா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி வழக்குப்பதிவு செய்து ெபான்னுசாமியை கைது செய்தார்.


Next Story