குமரியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 28 பேர் கைது


குமரியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 28 பேர் கைது
x

குமரியில் சட்டவிரோதமாக மதுவிற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் நாடன்குளம் சந்திப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகில் உள்ள பரமார்த்தலிங்கபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ராஜூ (வயது 58) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 27 பேரை கைது செய்து வழக்குகள் பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 595 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story