மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது


மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது
x

மாவட்டத்தில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 28 பேர் கைது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக சத்தியமங்கலத்தில் போஜா (வயது 38), ராஜீவ்காந்தி (34), ரவி (40), அம்மாபேட்டையில் ஜம்பு (54), ஈரோடு சூரம்பட்டிவலசில் சரவணன் (32), கொடுமுடியில் அண்ணாமலை (46), ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் விஜயகுமார் (32), வெள்ளித்திருப்பூரில் நாராயணன் (65), சென்னிமலையில் ராமநாதன் (47), வெள்ளோட்டில் செந்தில் என்கிற கிருஷ்ணமூர்த்தி (48), பெருந்துறையில் நித்யானந்தம் (32), முத்துவேல் (50), அந்தியூரில் கோபாலகிருஷ்ணன் (48), ஆப்பக்கூடலில் முருகேசன் என்பவருடைய மனைவி விஜயலட்சுமி (50), சித்தோட்டில் பொன்னான் (55), லோகநாதன் (39), பவானியில் மாதேஸ்வரன் (53), ரஜினி (47), காஞ்சிக்கோவிலில் ஞானவேல் (31), சிறுவலூரில் பாண்டி (31), கடத்தூரில் பழனி (25), கருப்புசாமி (40), கோபியில் லோகநாதன் (32) ஆகிய 23 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 133 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பையா வீதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்த அதேபகுதியை சேர்ந்த வடிவேல் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக அம்மாபேட்டை பகுதியில் செல்வன் (63), சூரம்பட்டியில் பாலமுருகன் (43), கொடுமுடியில் ஆசீர்வாதம் (47), நம்பியூரில் பால்துரை (32) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஒரே நாளில் மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Related Tags :
Next Story