தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயம்


தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயம்
x

சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயமானது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை மாயமானது.

நகை மாயம்

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் கீழூரில் வசித்து வருபவர் ராஜாராம் (வயது 58). இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். ராஜாராம் கட்டிட தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு சொந்தமான நகைகளை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 23.10.2022 அன்று நகைகளை பயன்படுத்திவிட்டு பின்னர் வழக்கம் போல் வீட்டின் பீரோவில் பாதுகாப்பாக வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் நகைகளை சரிபார்த்த போது அதில் 28½ பவுன் நகைகளை காணவில்லை.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாராம் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பானுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணா ஆகியோர் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பீரோ உடைக்கப்படாத நிலையில் நகைகள் மட்டும் காணாமல் போனதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story