2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு


2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு
x

2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு

கோயம்புத்தூர்

அன்னூர்

அன்னூரில் 2 வீடுகளில் 28 பவுன் நகை திருட்டு நடந்தது. இதில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பூட்டு உடைப்பு

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த பொன்னேகவுண்டன்புதூர் மனோன்மணி கார்டனை சேர்ந்தவர் மாமணி(வயது 32). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக்(32). கணினி என்ஜினீயர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். நேற்று காலையில் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த 2 வீடுகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

நகை, பணம் திருட்டு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாமணி, கார்த்திக் ஆகியோர் தங்களது வீடுகளுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, மாமணியின் வீட்டில் 26½ பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார்த்திக் வீட்டில் 1½ பவுன் தங்க நகை, ரூ.6,500 ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அன்னூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், திருட்டு நடந்த வீடுகளில் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

------------------


Next Story